HOME

    N Harihara Subramaniyan (Passion for Nation)

  • +91 9940314575

REFLECTIONS (எண்ணமும் எழுத்தும்)

  • N Harihara Subramaniyan
  • தாயும் நீயே தந்தையும் நீயே உடலும் நீயே உயிரும் நீயே........இறைவா!


    அற்புதமான அந்த பாடல் வரிகள் அக்காலை வேலையில் எங்கோ என்னை இழுத்துச் சென்றன.


    ஆகா, அற்புதமான வகையில் இந்த உலகை படைத்தளித்தான் இறைவன். அதனிலும் அற்புதமாக நமக்கெல்லாம் இந்த உன்னத உடலைத் தந்தான். நல்வழி நடக்க அறிவைத் தந்தான். அன்பைத் தர, உணர உள்ளம் ஈந்தான்.


    ஆகா, நம் குழந்தைகள் நல் வாழ்வு வாழவேண்டுமே என்று வாழும் வகைகளை வேதமாகத் தந்தான்.


    ஆகா, இவற்றையெல்லாம் கற்றுணர்ந்து அவ்வழி நடக்க நாள் படுமே, எல்லோராலும் முடியாதே, மாயை தடுமாறச் செய்யுமே என்று தானே உள் ஒளியாக, மனசாட்சியாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்தான், வழி காட்டினான் அந்த தயாபரன். நமக்கெல்லாம் தாயும் தந்தையுமாகிய அந்த தயாபரன்.


    நமக்கு ஆதரவாக ஐம்பூதங்களைத் தந்தான்,சத்துக்களும் சுவையும் நிறைந்த காய்கறிகள், கனி வகைகள், தானியங்கள் உடலை நோயிலிருந்து காப்பாற்ற மூலிகைகள், செல்வம் சேர கனிம வளம், எரி பொருள் வளம் என்று ஒன்றும் குறையின்றி தன குழந்தைகளுக்காக பார்த்து பார்த்து செய்வித்து நின்றான்.


    அத்துனையும் பெற்று கொண்ட நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்?!!எண்ணிப் பார்போம்?


    அப்படி இருந்தும் அவன் நம்மிடம் செலுத்தும் அன்பு மட்டும் குறைவதே இல்லையே.


    நாம் மட்டும் அவனது நல் குழந்தையாய், அவன் நமக்குத் தந்த யாவற்றிற்கும் தினம் தினம் நன்றி கூறி, நம்மையும் அவன் தந்த கொடைகளையும் நன்கு பேணி வந்தால் - ஒரு நாள் அன்புடன் நம்மை அவனுடன் சேர்த்து அனைத்துக் கொள்ள மாட்டானா ??


    அது தானே யாவரும் கொண்டாடும் முக்தி. அதை நம்மால் அடைய முடியாதா? எவ்வளவு எளிதானது அது.


    வாருங்கள்


    தர்மத்தின் வழி நடந்து தனையனை அடைவோம்.


    "ITS OUR BIRTH RIGHT"


    -ஹரிஹர சுப்ரமணியன்

    இறைவா நான் உனது குழந்தை என்றால் உரிமையுடன் கேட்கிறேன். உன் சொத்தை எனக்கு பிரித்து கொடு இப்போதே.


    நீ அரிய பொக்கிஷங்களாக வைத்திருக்கும் அந்த கல்யாண குணங்களில் ஒரு கால் பகுதியை என் கைகளில் தந்து விடு இப்போதே.


    ஹரிஹர சுப்ரமணியன்

    குழந்தை - ஒவ்வொரு குழந்தையும் தெய்வ சாந் நித்யம் நிரைந்ததாகவே பிறக்கிறது.


    அதனால் தான் அது எங்கிருந்தாலும் எச்சூழலில் இருந்தாலும் அக்குழந்தையை சுற்றி மகிழ்ச்சி ததும்புகிறது.


    அக்குழந்தையை எல்லோரும் வாரி அனைத்துக் கொண்டாடுகிறார்கள்,சந்தோஷப்படுகிறார்கள், அதுவும் நாள் முழுவதும் துள்ளி குதித்து ஆடிப்பாடி சக்தியின் விளையிடமாகத் திகழ்கிறது.


    அக்குழந்தை வளர வளர அதன் புலன்கள் வெளி உலகை நோக்கிச் செல்லச் செல்ல அந்த அளவிற்கு அந்த சாந்நித்யம் மறைகிறது.


    அதனாலேயே மகிழ்ச்சியின் உறைவிடமாகத் திகழ்ந்த அக்குழந்தை வளர வளர அதிலிருந்து மாறுபடுகிறது.


    குருகுலக்கல்வியில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கையால் எப்போதும் அந்த உள்ளிருக்கும் இறைவனைப் பற்றிக்கொண்டு மறு கையால் உலக கருத்தியங்களைச் செய்ய சொல்லிக் கொடுக்கப்படுகிறது .


    அவ்வாறு வளரும் ஒருவனால் இந்த உலகம் பயனுறுகிறது. அவன் தனக்கும் மற்றவர்க்கும் எப்போதும் நன்மை செய்பவனாகவே திகழ்கிறான்.


    ஹரிஹர சுப்ரமணியன்

    TO BELIEVE IN HIM IS THE FIRST STEP

    Go ON...

    Walk with him,

    Talk with Him...

    Become one with Him.

    THAT IS THE ULTIMATE - ALSO OUR BIRTHRIGHT


  • ...Hariharan
  • When humanity was created our creator did not put any upper limit to which we can grow.


    In fact he wants everyone of us to get back to him and is ready all the time to hold our hands and guide us to him.


    When that is the case why you have not taken the first step - that baby step?!


    The moment you do that then you are putting the entire responsibility on him to reach out to you.


    'Yes' Do that, Take that BABY STEP.


  • ...Hariharan
  • Ramesh

    Take good from everywhere. Don't become a follower. If u really aspire for a Selfless Guru seek the saints like Paramahamsa, Ramana Mahan, Vallalar, Thayumanavar, Kanchi Mahan and take to their teachings.


    Most of the self proclaimed Spiritual Leaders u will see not perfect. They have huge ego and go to the extent of proclaiming that they r the very Siva-And encourage people worshipping them. Take good things but don't go Behind them. If u do u will regret one day.


    U r already a well evolved soul. Allow the God in u to guide U. I am writing this as I know u as well as the Guru in your Life. Let God guide u to Glory.


  • ...Hariharan
  • கவிதைகள் (As A Poet)

    எனதருமை பாரதம் உயிர்த்தெழ வேண்டும்.
    இப் பாருக்கே ரதமாய் வழி தர வேண்டும்.


    மாணவர் குணசீலராய் வளர்ந்திடல் வேன்டும்.
    கலை பல கற்று கனிந்திடல் வேன்டும்..


    வீரத்திலும் விளையாட்டிலும் உரம் பெற வேண்டும்.
    உடல், மனம், ஆன்மா பொலிந்திட வேன்டும்.


    'என் நாடு' 'என் மக்கள்' என கலந்திடல் வேன்டும்.
    ஒருமையும் அமைதியும் நிலவிட வேண்டும்.


    கதிரவனாய் கல்விச்சாலைகள் வேண்டும்.
    அங்கு மெய்ஞானம், விஞ்ஞானம் ஒளிர்ந்திட வேண்டும்.


    புதியன, பெரியன தினம் படைத்திடல் வேண்டும்.
    படைப்புகள் வணிகமாக வளம் சேர்த்திடல் வேண்டும்.


    மாணவர்கள் மேலாண்மை பெற்றிட வேன்டும்.
    அவர்தம் கல்வியுடன் போர் தொழில் கற்றிட வேண்டும்.


    நம் கிராமத்தில் ஓர் ஆண்டு பணி சேவித்திட வேன்டும்.
    அங்கு மக்களோடு ஒன்றி அவர்தமை உயர்த்திட வேண்டும்.


    ஆகா அற்புதம் என உலகம் வியந்திட வேண்டும்.
    அன்பினால் அகிலத்தை நாம் வென்றிட வேண்டும்.


  • ...Hariharan
  • ஒரு மூங்கில் குழலில்
    இசையை ஊட்டும்
    மாயனே கிருஷ்ணா !.


    என் உடலில் புகுந்து
    உயிரில் கலந்த
    தூயனே கிருஷ்ணா


    பசுக்கள் சூழ்ந்து
    பாதம் வருடும்
    ஆயனே கிருஷ்ணா !


    இப்பசுவின் பதியாய்
    விரைந்து ஓடி
    வருவாய் கிருஷ்ணா !


    கோபிகைகள் கூடி மகிழும்
    கொகுல கிருஷ்ணா ?!
    இக் கோவணனை விட்டு
    எங்கே சென்றாய் கிருஷ்ணா ?!


    மலையை தூக்கி மழைக்கு
    குடையாய் பிடித்தாய் கிருஷ்ணா !
    நான் அழைத்தும் வாராக் காரணம்
    ஏன் சொல்வாய் கிருஷ்ணா !!


    பித்தனாகிப் பிதற்றுகிறேன்
    பார்த்தன கிருஷ்ணா - அதைப்
    பார்த்தும் பாரா முகம் ஏனோ
    சொல்வாய் கிருஷ்ணா ?!


    வெண்ணெய் நன்கு திரண்டிருக்கு
    வேன்குழல் கிருஷ்ணா
    இப்பானை உடைத்து வெண்ணை
    திருட வருவாய் கிருஷ்ணா.


    இப்பானை உடைத்து
    என்னை திருட வருவாய் கிருஷ்ணா.
    வருவாய் கிருஷ்ணா - ஓடி
    வருவாய் கிருஷ்ணா.


  • ...Hariharan
  • Poem On B V Rao, Close Family Friend Of Mr Hariharan

  • Click the Images View the Document
  • ACTION - REACTION (செயலும் அதன் வினை செயலும்)

    இன்று ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலும், இன்று நடப்பதாக இருந்தாலும் அவற்றின் பூர்வாங்கம் பல நாட்களுக்கு முன்னால், பல வருடங்களுக்கு முன்னால், ஏன், சில பிறவிகளுக்கும் முன்னாலேயெ எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதுபோலத்தான் உலகில் நடக்கும் அழிவுக்கும் ஆக்கங்களும், மகாபாரதம், ராமயணம் முதல் இன்று நடக்கும் நடப்புகள் வரை யாவுமே இதைத்தான் தெளிவாக நமக்கு படம் பிடித்துக் காட்டிக் கொன்டிருக்கின்றன.


    Hence Stopping them or reversing them is next to impossible. At the best we can Soften the effects by firmly putting ourselves in the path of Dharma, God.


  • ...Hariharan